The Indian Times

Beast படத்தின் வெறித்தனமான Update வெளியிட்ட Sun Pictures! அட இந்த பிரபல இயக்குனர் நடிக்கிறாரா?

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக அவதாரம் எடுத்துள்ளார் தளபதி விஜய். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

Advertisement

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தாயாருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறு விறுப்பாக நடந்த்து வருகிறது. சமீபத்தில் விஜய் பிறந்த நாளன்று இந்த படத்தின் first look போஸ்டர் வெளியாகியிருந்தது.

Advertisement

அதன் பிறகு எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் அதிகாரபூர்வ தகவல் ஒன்றை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதோடு vtv கணேஷ் , யோகிபாபு , லில்லிபுட் பரூக்கி ஆகியோரும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in