The Indian Times

Sivaangi போல மிமிக்ரி செய்து மேடையில் அசத்திய Kureshi…

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து இந்த நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர்.இந்த வார புதிய ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கோமாளிகளாக களம் இறங்கி மணிமேகலை,பாலா,குரேஷி,சிவாங்கி செய்யும் காமெடி கலாட்டாக்களுக்கு அளவே இல்லை.இடையில் புதிய கோமாளிகளாக வந்த அதிர்ச்சி அருண் மற்றும் பரத் வேறு.1 மணி நேரம் நிகழ்ச்சியே எப்படி முடிந்தது என்று தெரியாமல் நம்மை மெய் மறந்து காண வைக்கும் அந்த அளவிற்கு சிறப்பான நிகழ்ச்சி இது.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று கூறுவார்கள் அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி நமது மனதில் உள்ள கவலைகளை மறக்க செய்து சிரிக்க செய்கிறது என்று கூறினால் மிகையாகாது.

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்தவர்கள் தற்போது சினிமாவில் பெரிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்கள்.இந்நிலையில் குரேஷி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிவாங்கி போல பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.பல விதமான குரல்களில் குரேஷி மிமிக்ரி செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே,அவர் தற்போது சிவாங்கி போலெ மேடையில் அச்சு அசலாக பேசி கைத்தட்டினை வாங்கியுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் குரேஷிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://youtu.be/hHb-Hwh_D9w

Embed video credits : behindwoodstv

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in