The Indian Times

ரஜினி கோட்டையிலையே அவரது 24 ஆண்டு சாதனையை முறியடித்த RRR திரைப்படம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

Advertisement

தமிழகத்திற்கு அடுத்து ரஜினிக்கு அதிக ரசிகர்கள் உள்ள இடம் தான் ஜப்பான் . இங்கு ரஜினியின் படங்கள் பெருமளவு கொண்டாடப்பட்டு வருகிறது.ரஜினியின் முத்து திரைப்படம் ஜப்பானில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.அப்பொழுதே ரூ.23.5கோடி வரை வசூலித்திருந்தது இப்படம்.இதுவரை எந்த தமிழ் படமோ அல்லது இந்திய படமோ இந்தளவுக்கு வசூலை ஜப்பானில் பெறவில்லை.வசூலில் உச்சத்தில் இருந்த ரஜினியின் முத்து படத்தினை ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் படம் முறியடித்துள்ளது.

Advertisement

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானில் வெளியாகி இருந்தது.இப்படம் ரூ.24 கோடி வசூலித்து முத்து படத்தின் வசூலை முந்தியுள்ளது.இந்த செய்தி ரஜினி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in