The Indian Times

அசாமில் பிரம்மாண்ட வீட்டில் வசிக்கும் CWC சுனிதா… சொந்த வீட்டை சுற்றி காமித்து மிரள செய்த சுனிதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்து அனைவரையும் அசத்தி வருபவர் சுனிதா.இவர் அசாம் மாநிலத்தினை சேர்ந்தவர்.நடனம் மீதுகொண்ட தீராக்காதலால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் ஒன் சீசன்களில் கலந்துகொண்டு சின்னத்திரையில் அறிமுகமாகினார்.பின்னர் அவ்வப்பொழுது விஜய் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு வந்து சென்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது அவ்வாறு வந்து சென்ற இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ஒரு வாய்ப்பை வழங்கியது விஜய் டிவி.அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட சுனிதா தனது தவறான தமிழினால் காண்பவர்களை சிரிக்க செய்து அனைவரது மனத்தினையும் கவர்ந்துள்ளார்.தற்போது இவருக்கென ரசிகர் கூட்டமே உள்ளது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் சுனிதா.

இவர் சென்னையில் வாடகை வீட்டில் படப்பிடிப்பிற்காக வசித்து வருகிறார்.ஆனால் இவருக்கு அசாமில் மிகப்பெரிய வீடு உள்ளது.அதனை சுற்றிக்காண்பித்து வீடியோ எடுத்து யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இந்த வீடியோவை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து அடேங்கப்பா சுனிதா இவ்வளவு பெரிய வீடா உங்களுக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : SUNITA EXPRESS

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in