The Indian Times

வீட்டுல இனியா தூங்க இடம் வேணும்.. ராதிகாவிடம் கெஞ்சு கேட்ட கோபி | Baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று என்றால் அது பாக்கியலட்சுமி தொடர் தான்.இந்த நாடகத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,தினமும் இந்த நாடகத்தினை பல குடும்பத்து தலைவிகள் தவறாமல் பார்த்து வருகின்றனர்.பலர் கதாபாத்திரத்துடன் இந்த தொடர் ஒத்துப்போவதால் இதற்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியலட்சுமி தொடரின் கதாநாயகி கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.பாக்கியாவை ஏமாற்றிவிட்டு கோபி ராதிகா என்ற தான் கல்லூரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார்.இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வீட்டை விட்டு அனுப்பி குடும்பத்தினை இவரே பார்த்துக்கொள்கிறார்.இந்நிலையில் ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கோபி பாக்கியாவிடம் இருந்து இனியாவை பிரித்து தன்னுடன் கூட்டி கொண்டு வருகிறார்.இனியாவை ராதிகா உடன் வசிக்கும் வீட்டிற்கு கூடி வந்து தங்க வைக்கிறார்,இரவில் இனியாவுக்கு படுப்பதற்கு இடம் இல்லாததால் ராதிகாவிடம் வந்து கெஞ்சி கேட்கிறார்,அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இனியாவை பெட்ரூமில் படுக்க வையுங்கள்,நாம் ஹாலில் படுத்து கொள்ளலாம் என கூறுகிறார்.இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள். கோபியை,உங்களால் உங்கள் மகளுக்கே தூங்க இடம் கேட்க இவ்வளவு கெஞ்ச வேண்டியது இருக்கே என கூறி திட்டி வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=gju9CEt6zM0&feature=youtu.be&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in