சுனிதாவுடன் இணைந்து ஜாலியோ ஜூம்கானா ஆடிய சந்தோஷ் பிரதாப் | Cook With Comali | Santhosh Pratap

குக் வித் கோமாளி சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. குக் வித் கோமாளி என்றாலே சிரிப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்தது தான். அந்த வகையில் தற்போது குக்குகளாக கிரேஸ், சந்தோஷ் பிரதாப், தர்ஷன், அம்மு அபிராமி, ரோஷ்ணி ஆகியோர் பங்கேற்று உள்ளனர். கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா ஆகியோருடன் இன்னும் பலரும் பங்கேற்று உள்ளனர். இதில் பங்கேற்ற பலரும் இன்று திரைத்துறையில் முத்திரை பதித்து வருகின்றனர். புகழ் ஏற்கனவே தல அஜீத்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்துள்ளார். மேலும் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து வருகிறார். இவர் மட்டுமில்லாமல் சுனிதா, சிவாங்கி, பாலா போன்ற எல்லோரும் படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகின்றனர். கடந்த சீசனில் வந்த அஸ்வின் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.

சுனிதாவுடன் இணைந்து ஜாலியோ ஜூம்கானா ஆடிய சந்தோஷ் பிரதாப் | Cook With Comali | Santhosh Pratap 1

விளம்பரம்

இதில் சுனிதா சற்று வித்தியாசமானவர் ஏனெனில் இவருக்கு தாய்மொழி தமிழ் இல்லை. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமை பூர்வீகமாக கொண்ட இவர் வேலைத்தேடி சென்னை வந்துள்ளார். நடனக் கலைஞரானா இவர் விஜய் டிவியில் நடந்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பின் இவரது புகழ் உச்சத்தை அடைந்தது. தமிழ் சரிவர பேசத் தெரியாமல் இவர் செய்யும் காமெடி வேற லெவலில் இருக்கும். Youtube video code embed credits: Tamil Viral Videos 24×7

சுனிதாவுடன் இணைந்து ஜாலியோ ஜூம்கானா ஆடிய சந்தோஷ் பிரதாப் | Cook With Comali | Santhosh Pratap 2

விளம்பரம்

இவர் சுனிதா எக்பிரஸ் என்ற யூடியூப் சேனலை தொடங்கி பல லட்சம் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார். அதில் பல Vlogs பதிவேற்றி வருகிறார். தற்போது குக் வித் கோமாளி செட்டில் சந்தோஷ் பிரதாப் உடன் இணைந்து இவர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் ஜாலியோ ஜூம்கானா பாடலுக்கு ஆடி உள்ளார். செம்ம cute ஆக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment