The Indian Times

ப்ரியங்காவுக்காக கேக் செய்த அர்ச்சனா மகள் சாரா.. Fans மீட்டில் நடந்த வேற லெவல் சர்ப்ரைஸ் | Priyanga Arul Mohan

தமிழில் நெல்சன் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ப்ரியங்கா அருள் மோகன். அந்த படத்தில் வரும் பாடல் போலவே மெழுகு டால் போன்று இருப்பதால் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டார். தற்போது இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து “டான்” படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். இவரது புகைப்படங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திரைக்கு வந்து குறுகிய நாட்களிலேயே அவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

Advertisement

பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவர். திரைத்துறையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பல முண்ணனி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடத்து வருகிறார். 2019ம் ஆண்டு கன்னட படமான “ஒந்து கத ஹேல” என்ற படம் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்துவைத்தார். பின்னர் தெலுங்கில் நானியுடன் இவர் நடித்த கேங் லீடர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் அவர் தெலுங்கு துறையிலும் தன் முத்திரையை பதித்துள்ளார். Youtube Video Code Embed Credits: Behindwoods TV

Advertisement

நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்கும் அடுத்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு தங்கச்சியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் அண்ணாத்தே படத்தில் ரஜினி அவர்களுக்கு தங்கையாக நடித்து கலக்கி இருப்பார். அதே போல் பிரியங்காவும் தங்கை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது சென்னையில் Fans மீட் நடத்தியுள்ளார். அதில் அவருக்கு அர்ச்சனா அவர்களின் மகள் சாரா கேக் செய்து அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in