நிறைமாத நிலவுக்கு இரவில் விருந்து.. காஜல் கணவர் கொடுத்த வேற லெவல் சர்பிரைஸ் | Kaja Agarwal

விளம்பரம்
விளம்பரம்

நடிகை காஜல் அகர்வால், விளம்பரங்களில் நடித்து வந்த இவர், தமிழில் 2008ம் ஆண்டு வெளியான “பழனி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என விஜய், அஜித், தனுஷ், சூர்யா என அனைத்து முண்ணனி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். மகதீரா என்னும் தெலுங்கு படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. அதன் பின்னர் தான் தமிழில் இத்தனை படங்கள் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது என்று கூட சொல்லலாம். பின்னர் 2020ம் ஆண்டு கவுதம் என்னும் தொழிலதிபரை மணந்து கொண்டார்.

நிறைமாத நிலவுக்கு இரவில் விருந்து.. காஜல் கணவர் கொடுத்த வேற லெவல் சர்பிரைஸ் | Kaja Agarwal 1

விளம்பரம்

திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார் காஜல். கமல் நடிக்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். பின்னர் என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த படத்திலிருந்து விலகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தார். இந்த நிலையில் அவர் கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தது. மேலும் நிறைமாத வயிற்றுடன் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதை பார்த்த சில வக்கிர எண்ணம் கொண்டவர்கள் காஜலின் உருவத்தைப் பற்றி கேலி பேசினர். அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார். இவ்வாறு பேசுபவர்கள் பைத்தியங்கள் என்றும் அவர் விமர்சித்தார். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

நிறைமாத நிலவுக்கு இரவில் விருந்து.. காஜல் கணவர் கொடுத்த வேற லெவல் சர்பிரைஸ் | Kaja Agarwal 2

விளம்பரம்

தற்போது காஜலுக்கு பிரசவ தேதி நெருங்கிவிட்டதால் அவருடைய கணவர் காஜலுக்கு வேற லெவல் சர்பிரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதை அவரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். அதில் நள்ளிரவில் நடுக்காட்டில் கோட்டை போன்ற ஒரு இடத்தில் ராஜஸ்தானி மீல்ஸ் அவருக்காக பரிமாறப்பட்டது. இதை அவரது கணவர் அவருக்காக ஏற்பாடு செய்து இருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்து மறக்கமுடியாத நாளாக இந்த நாள் இருந்ததாக கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment