The Indian Times

சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ்.. ஆல்யாவுக்கு நடந்த பிரம்மாண்ட வளைகாப்பு | Alya Manasa

ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இதனால் அவரது கணவர் சஞ்சீவ் நேற்று மிக பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தினார். ஆல்யாவிற்கு இந்த மாதம் பிரசவத்திற்கு மருத்துவர் தேதி கொடுத்துள்ளார். இதனால் சிறிது காலம் அவர் ராஜா ராணி சீரியலை விட்டு விலக நேர்ந்துள்ளது. ஆனால் இன்ஸ்டாவில் ஆல்யாவிடம் இது குறித்து கேட்டபோது நான் விலகப்போவதில்லை “நோ சான்ஸ்” என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது ஆல்யாவிற்கு பதிலாக ரியா என்ற புது முகத்தை களம் இறக்கியுள்ளனர் ராஜா ராணி டீம். இன்று அதற்க்கான புதிய ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா மானசா. இதில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யாவும், கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும் நடித்து இருந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் இருவரையும் தூண்டிவிட, ரசிகர்களின் கோரிக்கைபடி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா சையத் என்று அழகான மகளும் உள்ளனர். ஐலா பார்ப்பதற்கே பொம்மை போல இருப்பார். அவர் அழகாக அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதை சஞ்சீவ் யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். Youtube Video Code Embed Credits: Galatta Tamil

Advertisement

தற்போது ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். மார்ச் 23 முதல் எப்போது வேண்டுமானாலும் பிரசவம் ஆகலாம் என்று கூறியுள்ளார். அதனால் அவருக்கு அவரது கணவர் சஞ்சீவ் வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். சென்னையில் மிக பிரமாண்டமாக நடத்தி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த அழகிய வீடியோவை நீங்களும் காண.. Watch the below video

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in