வாரிசுக்கு பயந்து முன்கூட்டியே வெளியாகிறது துணிவு? தீயாய் பரவும் தகவல்

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம்.இவர் நடிக்கும் படங்கள் தற்போது நூறு கோடிகளுக்கு மேல் தான் வசூல்களை செய்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் 60வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

வாரிசுக்கு பயந்து முன்கூட்டியே வெளியாகிறது துணிவு? தீயாய் பரவும் தகவல் 1

விளம்பரம்

இவரை போல ரசிகர்கள் படை கொண்டவர் தான் அஜித் குமார்.ஆரம்பத்தில் இருந்து இவர்களுக்குள் மட்டுமே போட்டி நிலவி வருகிறது.அஜித் என்றாலே நினைவுக்கு வருவது விஜய் தான். இவர்கள் ரசிகர்களுக்குள் சமூக வலைத்தளங்களில் நாங்கள் பெரியவர் நீங்கள் பெரியவர் என்ற போட்டிகள் மற்றும் சண்டைகள் நடந்து வருவது வழக்கம்.இந்நிலையில் தற்போது விஜயின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வருகிறார் 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

வாரிசுக்கு பயந்து முன்கூட்டியே வெளியாகிறது துணிவு? தீயாய் பரவும் தகவல் 2

விளம்பரம்

வாரிசு 12 ஆம் தேதி வெளியாகும் என நினைத்து துணிவை 11 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.ஆனால் வாரிசும் துணிவு வெளியாகும் அதே நாளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் துணிவு படத்தினை முன்கூட்டிய 10 ஆம் தேதி மாலை முதல் காட்சிகளை ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தகவல் காட்டுதீ போல பரவுவதால் வாரிசுக்கு பயந்து துணிவு முன்கூட்டியே வெளியாகிறது என விஜய் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.இது உண்மையென்றால் படக்குழு விரைவில் துணிவு வெளியாகும் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment