சிங்கத்துடன் உடன் பாயும் சிறுத்தை சிவா..சூர்யா42 படப்பிடிப்பு துவக்கம்

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

சிங்கத்துடன் உடன் பாயும் சிறுத்தை சிவா..சூர்யா42 படப்பிடிப்பு துவக்கம் 1

விளம்பரம்

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா உடன் கைகோர்த்துள்ளார்.சூர்யாவின் 41வது படமான வணங்கான் படத்தினை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.இப்படி தொடர்ந்து நடித்து வரும் சூர்யாவுக்கு சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மீண்டும் அடுத்தடுத்து இவர் நடிக்கும் படங்களிலும் இவர் தேசிய விருதினை பெறுவார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

சிங்கத்துடன் உடன் பாயும் சிறுத்தை சிவா..சூர்யா42 படப்பிடிப்பு துவக்கம் 2

விளம்பரம்

தற்போது சூர்யா தனது 43வது படத்திற்கு இயக்குனர் சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்துள்ளார்.இதுவரை சிவா இயக்கியுள்ள படங்கள் வெற்றி தோல்வி என இரண்டையும் சந்தித்துள்ளது.அண்மையில் வெளியாகிய அண்ணாத்த படம் பெரும் தோல்வியை சந்தித்தது.இந்நிலையில் சிறுத்தை சிவா தற்போது கூறிய கதை சூர்யாவுக்கு பிடித்து போகவே இப்படம் உறுதியாகியுள்ளது.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.இப்படத்தின் பட பூஜை அண்மையில் வெளியாகிய நிலையில் தற்போது இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment