The Indian Times

படம் பார்த்தா உயிர் போயிடும்…கழுவி ஊற்றும் ரசிகர்கள்…LIGER PUBLIC REVIEW

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா.இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே தெலுங்கில் உள்ளது.அறிமுகமாகிய சில வருடங்களிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் விஜய் தேவர்கொண்டா .தெலுங்கு சினிமாவில் 2011 ஆம் ஆண்டு வெளியாகிய நுவிலா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் வரிசையாக தெலுங்கில் நடிக்க தொடங்கினார்.எந்த படமும் சரியான வாய்ப்பினை பெற்று தராத நிலையில் ஒரு நாள் வெற்றிபெறுவோம் என போராடினார்.அவர் போராட்டத்திற்கும் கடின உழைப்பிற்கும் பலனாய் அர்ஜுன் ரெட்டி அமைந்தது.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை தெலுங்கு சினிமாவில் கொடுத்துள்ளார்.தற்போது குஷி எனும் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.இந்நிலையில் தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லிகர் படத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.காரணம் இப்படத்தில் இவருக்கு வில்லனாக பிரபல குத்துசண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார்.குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.இவர்களுடன் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார்

Advertisement

இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.சென்னையில் காலை முதலே காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.படத்தினை பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் வேஸ்ட்,ஹீரோ உடனுக்குடன் எல்லா போட்டியிலும் வெற்றிபெறுகிறார்.தயவு செய்து யாரும் பாக்காதீங்க என கூறி வருகின்றனர்.மேலும் சிலர் படம் பார்த்தா உயிர் போயிடும் அந்தளவுக்கு இருக்கு என ரசிகர்களிடம் படம் முழு நெகட்டிவ் விமர்சனத்தினை பெற்றுள்ளது.

Embed video credits : Shruti TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in