நீ செய்ய வேண்டியதெல்லாம் வீட்டுலே நான் செய்றேன்…பாவம் அறந்தாங்கி நிஷா கணவர்

பெண்களுக்கும் நகைச்சுவை வரும் என கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் அசத்தினார்.தனது நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கினார் அறந்தாங்கி நிஷா.தன்னை கேலி செய்தாலும் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைக்க கூடிய திறமை உள்ளவர் இவர்,கலக்க போவது யாரு நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று கொடுத்தது.இந்த நிகழ்ச்சி மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் அறந்தாங்கி நிஷா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மகனுடன் Weekend கொண்டாடிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா புகைப்படங்கள்

நீ செய்ய வேண்டியதெல்லாம் வீட்டுலே நான் செய்றேன்...பாவம் அறந்தாங்கி நிஷா கணவர் 1

விளம்பரம்

நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா

நீ செய்ய வேண்டியதெல்லாம் வீட்டுலே நான் செய்றேன்...பாவம் அறந்தாங்கி நிஷா கணவர் 2

விளம்பரம்

நிஷா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் நிஷா கணவர் ரியாஸ் அவருக்கு சமைத்து கொடுக்கிறார்.இந்த வீடியோவை பதிவிட்டு என் தங்கக்குட்டி எனக்காக சமைக்கிறாங்க என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் அவரது கணவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.மேலும் இப்படியே இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் செம்ம மாஸான புகைப்படம் எடுத்த அட்லீ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment