மீண்டும் வரும் சேனாபதி..இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவார் ,உலகநாயகன் என்ற பெயர் இவருக்கு இருந்தாலும் இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள் .அந்தளவிற்கு கமல்ஹாசன் மேல் தீராத பாசம் வைத்துள்ளனர் இவர் ரசிகர்கள்.இந்த ஆண்டு வெளியாகி தமிழ் படங்கள் ஒன்றும் தமிழகத்தில் வெற்றிபெறாமல் பிற மொழி படங்கள் மட்டுமே வெற்றிபெற்று வந்தது,

கட்டாயம் படிக்கவும்  பாரதி கண்ணம்மா வில்லி பரீனா மகனின் 2வது பிறந்தநாள் கொண்டாட்டம்

மீண்டும் வரும் சேனாபதி..இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் 1

விளம்பரம்

இந்நிலையில் உலகநாயகன் நடிப்பில் விக்ரம் வெளியாகி இந்த ஆண்டு வெளியாகிய சிறந்த தமிழ்ப்படம் என்று பெயரை பெற்று உலகம் முழுவதும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடைபோட்டது.விழுந்த தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிலைநாட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது.இந்நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிலர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது

கட்டாயம் படிக்கவும்  ஜீவானந்தத்தை சுட போறாங்க... அதிர்ச்சியில் உறைந்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

மீண்டும் வரும் சேனாபதி..இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் 2

விளம்பரம்

எப்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.படத்திற்கு மீண்டும் பூஜை போடப்பட்டு தற்போது படம் மீண்டும் உருவாக ஆரம்பித்துள்ளது.இப்படத்தின் வேலைகளை விரைந்து முடித்து அடுத்த ஆண்டுக்குள் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது.லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் நடிகை தமன்னா

மீண்டும் வரும் சேனாபதி..இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment