The Indian Times

SOCIAL MEDIA FAME JIKAMANU உடன் வெறியாட்டம் போடும் ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்ஷதா

சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் ஸ்ரீதர்.நடனத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ஆர்வம் அதிகம் உள்ளதால் பட வாய்ப்பு தேடி வந்து தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் இயக்கிய பல நடனங்கள் இணையத்தில் இன்றளவு பிரபலமாக உள்ளது பலரும் இந்த நடனத்திற்கு ரீல்ஸ் வீடியோக்களையெல்லாம் பகிர்ந்து வருகின்றனர்.அந்தளவிற்கு பிரம்மாண்டமாக நடனத்தினை இயக்கும் திறமை கொண்டவர் ஸ்ரீதர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

எதார்த்தமாக மாஸ்டர் ஸ்ரீதர் இவர் மகளுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இந்த வீடியோ மிக பெரிதளவு வைரலாகியது.இதனை தொடர்ந்து தனது மகளுடன் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.இவரை போல இவரது மகள் அக்ஷதாவும் நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.இதனால் இருவரும் இணைந்து தொடர்ந்து வீடியோ பதிவிட்டு பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை திரட்டியுள்ளனர்.

Advertisement

இணையத்தில் நடனமாடி மிகப்பெரியளவு ட்ரெண்ட் ஆகி இருப்பவர் ஜிகாமனு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வெளிநாட்டவர் ஆன இவர் தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.இந்நிலையில் அக்ஷதா ஸ்ரீதர் அவரை தங்களது ஸ்டுடியோவுக்கு அழைத்து வெறியாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் நடனத்தினை பார்த்த அக்ஷதா ரசிகர்கள் அவரின் நடனத்தினை வெகுவாகா பாராட்டி வருகின்றனர்.மேலும் தெலுங்கு குத்து பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட ஜிகாமனுவை அவரது ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in