The Indian Times

நம்மளையெல்லாம் முட்டாள்னு நினைச்சி இந்த படத்தை எடுத்திருக்காங்க – ருத்ரன் BLUESATTAI மாறன்

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் பின்னணி நடனம் ஆடுபவராக அறிமுகம் ஆகினார்.சினிமா கனவுகளை கையில் வைத்துக்கொண்டு கடினமாக போராடினார்.இவர் முதல் முறையாக வெள்ளித்திரையில் தோன்றிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய உழைப்பாளி. இந்த படத்தில் படத்தில் பின்னணி நடனம் ஆடுபவராக திரையில் வந்தார்.அதனை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 1999ஆம் ஆண்டு வெளியாகிய ஸ்பீட் டான்சர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து நடிகராக சினிமாவிற்குள் நுழைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது கதாநாயகனாக உயர்ந்து படங்களை நடித்தும் இயக்கியும் வருகிறார்.தற்போது இவர் இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது,மேலும் பாடல்களும் ஹிட் முடித்திருந்தது என்றே கூறலாம்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.இந்த விமர்சனத்தில் நம்மளையெல்லாம் முட்டாள்கள் நினைத்து இவங்களுக்கு இந்த அளவுக்கு எடுத்தா போதும்னு படத்தை எடுத்து வச்சிருக்காங்க,படத்துல கதையும் இல்லை ஒன்னும் இல்லை,பார்க்க சகிக்கவில்லை.படத்துல ரெண்டு பாட்டு ரீமிக்ஸ் பண்ணி வச்சிருக்காங்க,கிளைமாக்ஸ் ல பேய்த்தனமா அடிக்காரு,படம் பார்த்தவங்களாம் ஐயோ அம்மான்னு ஓடுறாங்க.என விமர்சனம் செய்துள்ளார்.

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in