The Indian Times

BILLA போல கோட் சூட்டில் கெத்தாக விமான நிலையம் வந்த தல அஜித்…

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையை அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது 61வது படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் சிறிய இடைவெளிக்கு பிறகு கலந்துகொண்டுள்ளார்

Advertisement

அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கும் 61வது திரைப்படத்திற்கு துணிவு என படக்குழு பெயரிட்டுள்ளது.அண்மையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வெளிநாடு சென்றுள்ளார்,இதற்கனக இன்று கோட் சூட்டில் கெத்தாக விமான நிலையம் வருகை தந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in