The Indian Times

புயல் போல சிலம்பம் சுற்றி அசத்தும் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா…

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த பாடல்களை தொடர்ந்து மக்களிடம் மிக பிரபலம் ஆனவர் ஆகினார் சினேகன்.இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகனுக்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை மணமுடித்துக்கொண்டார்.இவரும் சின்னத்திரையில் நடிகர் ஆவார்.கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் கன்னிகா.அதன்பின்னர் சரித்திரம் பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். சத்ரபதி,தேவராட்டம்,அடுத்தசாட்டை என்று பல படங்களில் நடித்துள்ளார் இவர்.அண்மையில் திருமுருகன் இயக்கத்தில் கல்யாண வீடு தொடரில் கதாநாயகியாக நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார்

Advertisement

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கன்னிகா ரவி அடிக்கடி வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவருக்கு ஓவியம் சிலம்பம் நடனம் என பல கலைகளையும் கற்று வைத்துள்ளார்.தற்போது குழந்தைகளுக்கு சிலம்பம் சொல்லிக்கொடுத்து இவரும் சிலம்பம் சுற்றியுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சினேகன் மனைவியா இது வீர தமிழச்சி தான் இவங்க என கூறி பாராட்டி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in