The Indian Times

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நேரம் மாற்றம்… இனி எப்பொழுது ஒளிபரப்பு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் சீரியல் ஒளிபரப்பு நேரத்தினை மாற்றியுள்ளது விஜய் தொலைக்காட்சி.இனி தமிழும் சரஸ்வதியும் சீரியல் வருகிற திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்ப படும் என அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளது விஜய் தொலைக்காட்சி.இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது என்றே கூறலாம்,இனி சரியான நேரத்தில் சீரியல் பார்க்க முடியாது என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : VIJAYTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in