The Indian Times

அசீமிற்கு போட்டியாக GYM சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்யும் விக்ரமன்

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளவர் தான் விக்ரமன்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக மக்களில் இவரை தெரியாதவர்கள் இருப்பது மிகவும் கம்மியே.அந்தளவிற்கு தனது விளையாட்டு மற்றும் பேச்சினால் ரசிகர்களை கவர்ந்தார்.இவருக்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவு கிளம்பியுள்ளது.காரணம் எதையும் வீட்டில் பொறுமையாக பேசுவதால் விக்ரமனின் இந்த பொறுமையே ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் தவறில்லை,எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரது ரசிகர்கள் ஓடி வந்து வாக்கு செலுத்தி காப்பாற்றபடுபவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இவர் தொகுப்பாளராக பணியாற்றியவர்,பின்னர் அங்கிருந்து அரசியலுக்கு சென்றுள்ளார்.ஆரம்ப கட்டத்தில் பல நாடகங்களிலும் நடித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் விக்ரமன் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது, இந்த முறை விக்ரமன் மற்றும் அசீமுக்கும் தான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.இதில் யார் ஜெயிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.இருப்பினும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் அவர் தான் கடந்த சீசனில் வந்த ஆரி போல பேசுகிறார் என பெரும் ஆதரவு இணையத்தில் பெருகியது.

இருப்பினும் பிக் பாஸ் சீசன் டைட்டிலை அசீம் வெற்றிபெற்றார்.இது விளையாட்டு இதனை கண்டு துவண்டு போக கூடாது என விக்ரமன் மக்களின் ஆதரவோடு இரண்டாவது இடத்தினை பெற்று தனது வழியில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார்.தற்போது இவர் ஜிம்மில் சேர்ந்து கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் லைக்குகளை கொடுத்து விக்ரமனுக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in