The Indian Times

தேர்தல் முடிவு அறிவிப்பு – கோதையை தோற்கடிப்பாரா தமிழ்… வெளியாகிய பரபரப்பான ப்ரோமோ … தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தொடரில் கோதையை எதிர்த்து தமிழ் தேர்தலில் போட்டியிட தொடங்கியுள்ளார்,இதில் தமிழை தோற்கடிக்க வேண்டும் என நினைத்து அர்ஜுன் ,தமிழ் ஒரு கொலை காரன் என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.இது தொழிலதிபர்கள் மத்தியில் தமிழுக்கு இருந்த நல்ல பேரை கெடுத்துள்ளது,

Advertisement

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,தேர்தல் முடிவுகளில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தமிழை விட கோதை அதிக வாக்குகளில் முன்னிலையில் இருக்க,இறுதிக்கட்ட தேர்தல் முடிவுகளை அறிவிக்க வருகின்றனர்.இதனால் தமிழ் பெரும் பரபரப்பில் உள்ளார்,மேலும் ரசிகர்களும் பெரும் பரபரப்பில் யார் வெற்றிபெற போவது என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in