The Indian Times

குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற தல அஜித் புகைப்படங்கள்

அஜித்குமார் தமிழ் சினிமா கொண்டாடும் முக்கிய நடிகர்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இவர்.தோல்விகள் வந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல்,விமர்சனங்களை கண்டு அஞ்சாமல் இவை அனைத்திற்கும் தனது வெற்றியின் மூலம் பதிலடி கொடுப்பதே அஜித்தின் ஸ்டைல் என்றே கூறலாம்

முதலில் உன் வீட்டை பார் பின் எனது படத்தினை பார் என அஜித் தனது ரசிகர்களை பார்த்து கூறுவது,ரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தினை எடுத்துக்காட்டுகிறது.

Advertisement

இதனால் தான் இத்தகைய ரசிகர்கள் பட்டாளத்தினை அஜித் என்ற மூன்று வார்த்தைகளில் அடக்கியுள்ளார்.

இவரது படம் வெளியாகும் நாள் தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.தனது ரசிகர் மன்றத்தினை கலைத்து விட்டு எந்த ஒரு நடிகராலும் இத்தகைய உயரத்தினை தொட முடியாது.அது அஜித்திற்கான நிரந்தர இடம்.

அண்மையில் இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்து வெளியாகிய வலிமை படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.இருப்பினும் துவண்டு போகாமல் மீண்டும் அதே கூட்டணியில் துணிவு படத்தில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

இவரின் அடுத்தப்பட இயக்குனர் யார் என்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.லைக்கா நிறுவன தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.இவரின் அடுத்தபடத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

தற்போது இவர் குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in