The Indian Times

நடிக்காதடா டேய்… அர்ஜுனை வெளுத்தெடுத்த தமிழ்.. அரண்டு போன அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல நாடகங்கள் மூலம் தங்களது வசம் ஆக்கியுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தான் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை பல வெற்றி சீரியல்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்கி வருகிறார்.நாடகம் தற்போது நல்ல சூடுபிடிக்க தொடங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது என்றே கூறலாம்,அந்தளவிற்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அர்ஜுன் போட்ட நாடகத்தால் அம்மாவிடம் சண்டையிட்டு தமிழ் மனைவி சரஸ்வதியை அழைத்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.வெளியேறிய தமிழ் சொந்த காலில் நின்று மனைவியை காப்பாற்ற போராடி வருகிறார்,மேலும் குடும்ப கஷ்டத்தினை தாங்காமல் சரஸ்வதி மெக்கானிக்கல் ஷாப்பில் கணவருக்கு தெரியாமல் வேலை செய்கிறார்.தமிழ் சொந்தமாக லேத் பட்டறை அமைத்து ஆர்டருக்காக போராடி வருகிறார் இந்த சமயம் அவருக்கு ஆர்டர் கிடைக்கவிடாமல் அர்ஜுன் பல திட்டங்களை தீட்டுகிறார்.

இறுதியாக தமிழுக்கு ஆர்டர் கிடைக்க போகும் நேரத்தில் சில திட்டங்களை தீட்டி ஆர்டரை சரியான நேரத்தில் பெறவிடாமல் தமிழை செய்கிறார் அர்ஜுன்.இருப்பினும் தமிழுக்கு ஆர்டர் கிடைத்துவிடுகிறது.தோல்வியால் கடுப்பாகி வெளியே சென்ற அர்ஜுனை பார்த்த தமிழ் எனக்கு ஆர்டர் கிடைக்க கூடாதுன்னு நீ என்னெல்லாம் பண்ணுரே நடிக்காதடா நீ என செம்ம கடுப்பாகி கத்தியுள்ளார். தமிழ் கத்துவதை பார்த்து அரண்டும் போயுள்ளார் அர்ஜுன்.

https://www.youtube.com/watch?v=t3FMMnAgN2A

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in