The Indian Times

பிறந்தநாளை தோழிகளுடன் கொண்டாடிய குந்தவை த்ரிஷா

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.

இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார்.

Advertisement

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.

ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.

தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதில் குந்தவையாக நடிகை த்ரிஷா நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

அதுபோல கடந்த வாரம் வெளியாகிய பொன்னியின் செல்வன் 2ம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இப்படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இன்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் த்ரிஷாவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.தற்போது த்ரிஷா அவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in