The Indian Times

இணையத்தை கலக்கி வரும் வாத்தி கம்மிங் பாடலின் ஒரு வருட சாதனை! விவரம் உள்ளே.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு மூமென்ட் போடாத ஆட்களே கிடையாது. எங்கு எந்த கல்யாணம், காச்சேரி நடந்தாலும் அங்கு வாத்தி கம்மிங் பாடல் நிச்சயம் ஒலிக்கும். அந்தளவிற்கு இந்த பாடலுக்கு குத்தாட்டம் போடாத ஆட்களே இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வாத்தி கம்மிங் பாடல் மக்களை கவர்ந்திழுத்துள்ளது. டிக் டாக்கில் தொடங்கி இன்று இருக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வரை இன்றும் பலர் இந்த பாடலுக்கு நடமாடி போஸ்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

முதல் முறையாக கோலிவுட்டில் வெளிவந்த பாடல் டோலிவுட் , பாலிவுட், ஹாலிவுட் என உலகளவில் உள்ள அனைத்து சினிமா ரசிகர்களையும் சுண்டி இழுத்திருக்கின்றது. கடந்த பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளிந்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே அனிருத் இசையில் வெளிவந்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் உலக சாதனை படைத்தது என்பது நிதர்சனமான உண்மை.

Advertisement

இன்று இந்த பாடல் வெளிவந்து 1 வருடத்தை கடந்துள்ளது , இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் one year of vaathi coming என்ற வீடியோ வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை இந்த பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட அனைவரின் நடன வீடியோக்களையும் இனைத்து வாத்தி கம்மிங் mashup போல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் தங்களின் வீடியோ இனம்பெற்றுள்ளது என்று பல ரசிகர்கள் உற்சாகமடைந்த நன்றி கூறி வருகின்றனர். விஜயின் புகழ் பட்டிதொட்டிமட்டுமல்ல உலகமெங்கும் பரவி உள்ளதை கண்டு விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான அஸ்வின், ஹர்திக் பாண்டியா , குல்தீப் யாதவ் ஆகியோரும் சமீபத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாக பரவியது. இது வரை இந்த பாடலை 8,34,92,395 பேர் யூடியூபில் கண்டுகளித்துள்ளனர். இதன் மூலம் இந்த பாடலை கேட்பதற்கு மட்டுமல்ல விஜயின் நடனத்தில் பார்ப்பதற்கும் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு என்ற வரிகளுக்கு ஏற்ப உலக அளவில் சாதனை படைத்துள்ளது விஜயின் வாத்தி கம்மிங் பாடல்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in