The Indian Times

அஜித் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் படம் தான் காரணம்! வலிமை பட வில்லன் நடிகர் கார்த்திகேயா பேட்டி.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாய் ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன் கடின உழைப்பால் இன்று சிகரம் தோட்ட நடிகர் இவர். கோடிக்கணக்கான ரசிகர்கள் இவரை திரையில் பார்த்தாலே போதும் என்று ஏங்கி தவித்து கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் இவரது படம் வெளியானால் ரசிகர்களுக்கு திரையரங்கு திருவிழா போல் காட்சியளிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நீண்ட நாட்களாக அஜித் ரசிகர்கள் எதிர்ப்பது காத்திருக்கும் ஒரு விஷயம் வலிமை திரைப்படத்திற்காக மட்டும் தான்.

Advertisement

வலிமை படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்கள் கடந்த பல நாட்களாக வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். நீண்ட நாள் காத்திருந்ததற்கு பலனளிக்கும் விதமாக நேற்று வலிமை படத்தின் சிறப்பான அப்டேட் வெளியானது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு உற்சாகத்தில் மிதந்தனர். படத்தின் பர்ஸ்ட் லுக்காக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

Advertisement

இதை தொடர்ந்து இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் தான் வலிமை படத்தில் வில்லனாக நடிப்பதற்கு மாஸ்டர் படம் தான் காரணம் என்று கூறியுள்ளார். மாஸ்டர் படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருப்பார். அதே போன்று நான் ஈ திரைப்படத்தில் சுதீப் வில்லனாக அசத்தி இருப்பார். ஹீரோக்கள் வில்லனாகவும் நடித்து தாங்கள் ஒரு சிறந்த நடிகர்கள் என்று வெளிக்காட்டி வருகின்றனர். அதை பார்த்து தான் நானும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் கார்த்திகேயா.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in