The Indian Times

H வினோத் என்ன ஏமாத்திட்டாரு சார்… கதறி அழுத தல ரசிகர் | Valimai | Ajithkumar

தற்போது இன்னொரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் ஒருவர் கண்ணீர் மல்க பேட்டி ஒன்றை கொடுக்கிறார். பத்திரிக்கையாளர் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்க H. வினோத் தம்மை ஏமாற்றி விட்டார் என்றும், தீரன் படம் போல் எதிர்பார்த்து வந்தேன் ஆனால் படம் அப்படி இல்லை என்று கூறுகிறார். மேலும் “தல” க்காக தான் என்றும் அழுதுகொண்டே கூறுகிறார்..அந்த வீடியோவை நீங்களும் காண.. watch the below video..

வலிமை படம் காலை 4 மணிக்கு முதல் ஷோ திரையரங்குகளில் திரையிடப்பட்டது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களிடம் கேட்ட போது படம் மிகவும் நன்றாக இருந்ததாகவே பெரும்பாலான ரசிகர்கள் கூறிவிட்டு சென்றனர். ஆனால் தற்போது இரண்டாவது மற்றும் மதிய காட்சிகள் முடிவடைந்த நிலையில் இரு வேறு மாதிரியான கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு வருட கடுமையான போராட்டங்களுக்கு பின்பு வெளியாகியுள்ளது வலிமை திரைப்படம். 2 வருடங்களாக அஜித்தை பார்க்காத சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு வலிமை திரைப்படம் குறித்த அப்டேட்கள் கிடைத்தபோது மகிழ்ச்சி கொண்டாடத்தில் திளைத்தனர். மேலும் 24ம் தேதியை எதிர்நோக்கி வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர் ரசிகர்கள்.

Advertisement

Advertisement

தற்போது ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஒருவர், படத்தில் சண்டை காட்சிகள் மற்றும் பைக் ரேஸ் காட்சிகள் மட்டுமே நன்றாக இருந்ததாகவும், மற்றபடி சென்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் மிகவும் மோசமாக இருந்ததாகவும் கூறினார். அம்மா சென்டிமெண்ட் காட்சிகள் ஒன்று கூட மனதை தொடவில்லை என்று கூறிய அவர் இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் ஒன்று தேவையில்லை என்பது போல் உள்ளதாக கூறினார். தல ஒருவருக்காக மட்டும் இந்த படத்தைப் பார்க்கலாம் என்றும் மற்றபடி படத்தில் ஒன்றுமே இல்லை என்றும் அவர் கூறினார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in