விஷாலுடன் மோதி நயன்தாரா ஜெயித்தாரா?கனெக்ட் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகை நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்துள்ள படம் கனெக்ட்.இப்படத்தில் இவருடன் அனுபம் கேர்,சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.90 நிமிட படமாக இப்படம் உருவாகியுள்ளது.முழுக்க முழுக்க திகில் படமாக இப்படத்தினை இயக்குனர் உருவாக்கியுள்ளார்.ஆங்கில பேய் படங்களுக்கு இணையாக இப்படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசைகள் உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரைலரில் காண முடிகிறது.

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

விஷாலுடன் மோதி நயன்தாரா ஜெயித்தாரா?கனெக்ட் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? 1

விளம்பரம்

இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு திரையரங்குகளில் நேற்று வெளியாகியுள்ளது,இப்படத்திற்கு போட்டியாக விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி திரைப்படமும் வெளியாகி இருந்தது.இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை தான் ரசிகர்களிடம் பெற்று வருகிறது.இந்த இரண்டு படங்களும் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும்.இருப்பினும் இரண்டு படங்களும் செய்த வசூல் என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.தற்போது இப்படங்களின் முதல் நாள் வசூல் விபரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

விஷாலுடன் மோதி நயன்தாரா ஜெயித்தாரா?கனெக்ட் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? 2

விளம்பரம்

லத்தி திரைப்படம் முதல் நாளே சுமார் 2 கோடி வரை வசூலை பெற்றுள்ளது,ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய கனெக்ட் படம் முதல் நாள் ஒரு கோடி வரை மட்டுமே வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை இதுவரை படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இரண்டு படங்கள் வசூல் குறித்து விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment