The Indian Times

தங்கமான மனுஷன் அவரு…விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து கண்கலங்கிய விஜயின் தந்தை | S.A.Chandrasekar

மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பவர்கள் சிலர் மட்டுமே. நம் சமூகத்தில் பல தலைவர்கள் வந்து போனாலும் சில தலைவர்கள் மட்டுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் திரைத்துறையில் இருந்து, அரசியலுக்கு மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கில் வந்தவர்தான் விஜயகாந்த் அவர்கள். சாதிப்பதற்கு நிறமோ, அழகோ தேவையில்லை என்று சாதித்து காட்டியவர் விஜயகாந்த் அவர்கள். ஒரு காலத்தில் தமிழ் சினிமா துறையில் கொடிகட்டி பறந்தவர்களில் ஒருவர்தான் அவர். ரஜினி, கமல் என இரு துருவங்களின் காலத்திலும் தனக்கென ஒரு முத்திரையை ஆணித்தரமாக பதித்து இருந்தார்.

Advertisement

பிறகு 2005ம் ஆண்டு தமிழகத்தின் இரு பெரும் துருவங்களான திமுக அதிமுகவிற்கு மாற்றாக தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார். தொடங்கிய அடுத்தே ஆண்டே வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். பிறகு எதிர்கட்சி தலைவரானார். பிறகு வந்த அனைத்து தேர்தல்களிலும் தேமுதிக வெற்றியை ருசிக்கவே இல்லை. தொடர் தோல்விகள் விஜயகாந்தை முடக்கி போட்டன. அவரால் முன்பு போல் பேசவோ, நடக்கவோ முடியவில்லை. அவர் பெயரில் வெளியாகும் அறிக்கைகளில் கூட அவர் கையெழுத்து இருப்பதில்லை மாறாக ரப்பர் ஸ்டாம்பு வைத்து கையெழுத்து போட்டு இருப்பார்கள். இப்படியாக சில வருடங்களாக அமெரிக்காவில் மருத்துவம், ஓய்வு என அவரது வாழ்க்கையே முடங்கிவிட்டது எனக் கூறலாம்.

Advertisement

இந்த நிலையில் சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அதை பார்த்த ஒருவர் கூட கலங்காமல் இருக்க முடியாது. அந்த படத்தை சிங்கம் போல் இருந்த மனதர் இன்று இப்படி ஆகி விட்டாரே என்று ஒரு கனம் கலங்கி போயினர். தற்போது இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான SA சந்திரசேகர் பேட்டியின் போது அந்த புகைப்படம் அவரிடம் காண்பிக்கப்பட்டது. அதை பார்த்த சந்திரசேகர் மனமுடைந்து போனார். அவருடன் 17 படங்களில் பணியாற்றியதாகவும், இந்த புகைப்படத்தை பார்க்கும் போது வேதனையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in