கிகியுடன் சேர்ந்து பாத் டிரஸ்-ல் குத்தாட்டம் போடும் சாந்தனு | Cute Video | Shanthanu Kiki

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதியரின் மகன் சாந்தனு. தந்தையை போலவே திரைப்படத்துறையில் கால் பதித்தார். இவரது முதல் படமான சக்கரக்கட்டி எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இருந்தாலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரியளவில் வெற்றியடைந்தது. அதன் பிறகு இவர் தேர்ந்துடுத்த கதைகள் ஏதும் சாந்தனுவிற்கு பாராட்டுகளை வாங்கி தரவில்லை. வெகு நாட்களுக்கு பிறகு பாவ கதைகள் படத்தில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார் இயக்குனர் பாக்கியராஜ் அவர்களின் மகன் நடிகர் சாந்தனு. இந்த படத்திற்கு பிறகு இவரது செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது.

கிகியுடன் சேர்ந்து பாத் டிரஸ்-ல் குத்தாட்டம் போடும் சாந்தனு | Cute Video | Shanthanu Kiki 1

விளம்பரம்

இறுதியாக இவர் நடித்த படம் மாஸ்டர். ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இவர் இடம்பெற்றதால் நெட்டிசன்கள் இவரை மீம்ஸ் போட்டு வெச்சு செய்தனர். இந்நிலையில் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.முருங்கக்காய் சிப்ஸ், கே பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் தமிழ் திரைப்படம்.

கிகியுடன் சேர்ந்து பாத் டிரஸ்-ல் குத்தாட்டம் போடும் சாந்தனு | Cute Video | Shanthanu Kiki 2

விளம்பரம்

இவருக்கும் தொகுப்பாளினியாக இருந்த கிகி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் செய்யும் குறும்புகளை யூடூப்பில் பதிவேற்றி வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கிகி பிறந்தநாளுக்காக சாந்தனு சர்ப்ரைஸ் செய்துள்ளார். தற்போது இருவரும் இணையத்தை கலக்கி வரும் கச்சா பாதாம் என்ற பாடலுக்கு பாத்ரூமில் இருந்தும் ரிசார்ட்டில் இருந்தும் ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளனர். Cute ஆக உள்ள அந்த அழகான வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment