சிங்கம் போல இருந்த விஜயகாந்தின் தற்போதைய நிலையை கண்டு கண்கலங்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிக்க உடல் நிறம் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்.திறமை இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தெரிவுபடுத்தியவர்.சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவை மட்டும் கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார்,இவருக்கு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது. இதோ அந்த காட்சி

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

விளம்பரம்

 

பல வெற்றிப்படங்களில் நடித்து பல தயாரிப்பாளர்களை வாழ வைத்துள்ளார்.இவரது படங்கள் நல்ல வசூலை பெறுவதால் இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலர் காத்துக்கொண்டிருந்தனர்.நடிப்பிற்காக நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார் விஜயகாந்த்,நடிகர் சங்க தலைவராக இருந்து தனது பணியினை சிறப்பாக செய்துவந்தார்.பின்னர் அங்கிருந்து அரசியலில் களம் இறங்கினார்.பல லட்சம் பேர் இவர் கட்சியில் உள்ளனர்.நிறைய நல்லதுகளை மட்டும் விஜயகாந்த் செய்து வந்துள்ளார்.அதனால் தான் மக்கள் இவரை கேப்டன் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

சிங்கம் போல இருந்த விஜயகாந்தின் தற்போதைய நிலையை கண்டு கண்கலங்கும் ரசிகர்கள் 1

தற்போது உடல்நல குறைவால் விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை.நீண்ட நாட்கள் கழித்து சுதந்திர தினத்தினை முன்னிட்டு தேசிய கொடி ஏற்ற வருகை தந்துள்ளார்.அங்கு அவர் இருக்கும் வண்டியில் இருந்தே கொடியேற்றியுள்ளார்.பின்னர் ரசிகர்கள் தொண்டர்களை கண்டு கை அசைத்துள்ளார்.இந்த வீடியோ நேற்று சமூகவலைத்தளங்களில் அதிகளவு வைரலாகியது.சிங்கம் போல இருந்த விஜயகாந்தின் தற்போதைய நிலையை கண்டு அவரை நேரில் பார்த்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment