The Indian Times

வயதான கார்த்தியாக மாறிய விருமன்…வைரலாகும் புதிய படத்தின் போஸ்டர்

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அப்பா,அண்ணனை போல் தானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என துணை இயக்குனராக மணிரத்தினத்திடம் பணியாற்றினார்.பின்னர் நடிகராக களம் இறங்கிவிட்டார்.அமெரிக்கா சென்று படித்த நடிகர் கார்த்தி தனது முதல் படமான பருத்திவீரன் படத்தில் மதுரை ஆளாக நடித்து அந்த மொழிகளிலேயே பேசி அனைவரையும் ஆச்சரியப்பட செய்தார்.முதல் படமே பெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகராக கார்த்தியை உருவாக்கியது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பையா படத்தில் நடித்தார்.அப்படமும் பெரும் ஹிட் கொடுத்தது இவருக்கு.இவ்வாறு தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பட்டியலில் கார்த்தியும் குறுகிய காலத்திலேயே இணைந்தார்.

Advertisement

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக பெரும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மேலும் தொடர்நது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் கார்த்தி.அந்த வரிசையில் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.அந்த வரிசையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இரண்டாவது முறையாக விருமன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.

Advertisement

தற்போது கார்த்தி இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.சர்தாரில் கார்த்தி மிடுக்கான போலீஸ் ஆகவும்,வயதான கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார்.இதுவரை எந்த போஸ்டரிலும் அவரின் வயதான தோற்றத்தினை முழுமையாக படக்குழு காட்டியதில்லை தற்போது சர்தார் படத்தில் நடிகர் கார்த்தியின் வயதான கெட்டப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் கார்த்தியா இது அடையாளமே தெரியலை என கமெண்ட் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in