The Indian Times

லுங்கியை கட்டிக்கிட்டு மரண குத்தாட்டம் போட்ட நடிகை நிக்கி கல்ராணி

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.இப்படத்தில் நடித்ததை தொடர்ந்து இவர் அ மலையாளம் மற்றும் கன்னட படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.முதல் படமே தமிழ் சினிமாவில் நிக்கி கல்ராணிக்கு நல்ல பெயரை அளித்தது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதேபோல் தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பினை பெற்றவர் ஆதி.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.நிக்கி கல்ராணியும் சினிமா நடிகர் ஆதியும் இணைந்து நடித்த முதல் படம் யாகவா ராயினும் நா காக்க இப்படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பல செய்திகள் வெளியாகியது.இப்படத்தினை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து மரகதநாணயம் படத்தில் நடித்தனர்.இப்படம் இருவருக்கும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அண்மையில் திருமணமும் செய்துகொண்டு நட்சத்திர தம்பதிகள் பட்டியலில் இணைந்தனர்

Advertisement

தற்போது நிக்கி கல்ராணி லுங்கியில் குத்தாட்டம் போட்டுள்ளார்.லுங்கியை கட்டிக்கொண்டு மரண குத்து போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பரா ஆடுறீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.ஏற்கனவே நிக்கி கல்ராணி நடனத்தில் பட்டையை கிளப்புபவர் என்பது எல்லோருக்கும் தெரியும் அவரிடம் நடனத்தினை பற்றி கூறவா வேண்டும்.குத்தாட்டம் போட்டு அசத்தி விட்டார்.மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

https://youtube.com/shorts/JBfboWstyU8?feature=share

Embed video credits : Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in