நான் போய்ட்டு வரட்டுமா சார்..ரசிகரிடம் அன்பாக கேட்டுக்கொண்ட அஜித் குமார்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

நான் போய்ட்டு வரட்டுமா சார்..ரசிகரிடம் அன்பாக கேட்டுக்கொண்ட அஜித் குமார் 1

விளம்பரம்

அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார்.தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் நடிப்பிற்கு சிறிய இடைவெளிட்டு அஜித் வெளிநாடு சென்றுள்ளார்.அங்கு பைக் பயணங்களை முடித்துவிட்டு அஜித் குமார் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை திரும்பியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

நான் போய்ட்டு வரட்டுமா சார்..ரசிகரிடம் அன்பாக கேட்டுக்கொண்ட அஜித் குமார் 2

விளம்பரம்

அஜித்குமாரை விமான நிலையத்தில் கண்ட ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்து கொண்டு புகைப்படம் எடுத்து வந்துள்ளனர்.அஜித்தும் அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.பின்னர் அங்கிருந்து கிளம்பும் பொழுது அங்கு உள்ள ரசிகர்களிடம் நான் போய்ட்டு வரேன் என கூறி சென்றுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் தலக்கு எவ்வளவு நல்ல மனசு அனைவரிடமும் பண்பாக நடந்துகொள்கிறாரே என அவரை பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment