The Indian Times

தாத்தாவை போட்டு படாதபாடு படுத்தும் பேரன்கள்… பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரஜினி

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. தற்போது ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகிய பாபா படத்தினை மீண்டும் வெளியிட்டுள்ளனர்.படத்தில் புதிய காட்சிகளை சேர்த்து பல காட்சிகளை கட் செய்து வெளியிட்டுள்ளனர்.ரசிகர்கள்இப்படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.

Advertisement

நடிகர்கள்,அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிக்கு அவரது பேரன்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி அவரை கட்டியணைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.இந்த புகைப்படத்தினை ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in