தலைவா..பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழக்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடந்து முடிந்த சரவணன் தங்கமயில் திருமணம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

தலைவா..பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சிவகார்த்திகேயன் 1

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.கடந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பெருமளவு ஹிட் அடித்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா பட இயக்குனரின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் லுக்கில் கலக்கும் சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

தலைவா..பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சிவகார்த்திகேயன் 2

விளம்பரம்

இவர் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பது அனைவர்க்கும் தெரியும்.இன்று சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை தமிழகமே கொண்டாடி வருகிறது.தற்போது சூப்பர் ஸ்டார் ஜெயிலர் படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார்.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜெயிலர் படப்பிடிப்புக்கே சென்று ரஜினிகாந்த்தினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.இந்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment