யோகிபாபுவின் குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இன்று எந்த இயக்குனர் படம் எடுத்தாலும் தன் படத்திற்காக நகைச்சுவை நடிகர் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை பற்றி யோசித்தால் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருபவர் யோகி பாபுவாக தான் இருப்பார். ஒரு காலத்தில் காமெடி என்றாலே கவுண்டமணி செந்தில் , வடிவேலு , விவேக் , சந்தானம் ஆகியோர் தான் ஞாபகத்திற்கு வருவார்கள்.

யோகிபாபுவின் குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் 1

விளம்பரம்

ஆனால் இன்றோ சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் புடித்த காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு நடித்தாலே அதற்கென்றே மக்கள் படத்தை பார்க்க வருகிறார்கள். தற்போது இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் ஹேர்ஸ்டைல் பார்த்தே சிரித்து விடும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

யோகிபாபுவின் குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் 2

விளம்பரம்

இறுதியாக இவர் கார்த்தியின் சுல்தான் மற்றும் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் இவர் ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது யோகிபாபு தன் குடும்பத்தோடு சாமியை தரிசனம் செய்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிலும் முதல் முறையாக தன்னுடைய குழந்தையையும் காட்டியுள்ளார்.

யோகிபாபுவின் குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment