The Indian Times

விக்ரம் First Look Posterல் இருக்கும் Code Red கான அர்த்தத்தை விஸ்வரூபம் படத்திலேயே சொன்ன கமல்

Watch the video below தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறினாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே நபர் உலகநாயகன் கமல் ஹாசன். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர் கமல்ஹாசன். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன். 2021 சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சார பணியாற்றி வந்த கமல்ஹாசன் தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

Advertisement

லோகேஷ் கனகராஜ் வெறும் 3 படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் மூன்று படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது. கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் பற்றி சொல்லவே வேண்டாம். 50 சதவீத இருக்கையில் வெளி வந்தாலும் வசூல் சாதனை படைத்தது.இதில் விஜய் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது தான் படத்திற்கு ப்ளஸ் என்று கூறலாம்.

Advertisement

அந்தளவிற்கு லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பர். விக்ரம் படத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் நிலையில் தற்போது இந்த படத்தின் first look வெளியாகியுள்ளது. கமல் , விஜய் சேதுபதி , பாஹத் பாசில் மூவரை வைத்து பயங்கரமான first look ஐ வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் code red என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான விளக்கத்தை கமல் விஸ்வரூபம் படத்திலேயே கொடுத்து இருக்கிறார்.Watch the video below

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in