The Indian Times

வலிமை Motion poster ல் வரும் இந்த புகைப்படம் எதிலிருந்து எடுத்தது தெரியுமா ? வச்சு செய்யும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தற்போதுவரை தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தல அஜித். தல அஜித் என்றாலே மாஸ் தான். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல்  தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து இன்று உச்சத்தில் கொடிகட்டி பரப்பவர் தல அஜித். இவருக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தல அஜித் நடிப்பில் மட்டுமல்ல அதையும் தண்டி பல திறமைகளை தனக்குள் ஒளித்து வைத்துள்ளார். கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல அஜித் எப்போதும் கிங் தான்.

Advertisement

இவர் இறுதியாக ஹிந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது வலிமை என்ற திரைப்பதில் நடித்துள்ளார் தல அஜித். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இந்த படத்தின் பெயர் வலிமை என்ற அப்டேட் க்கு பிறகு இந்த படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் கிடைக்காமல் இருந்தது. இதனால் மிகவும் நொந்து போன தல ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் வலிமை அப்டேட்

Advertisement

கேட்டனர். 2 வருடங்களின் காத்திருப்பிற்கு பிறகு நேற்று இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாணது. அது போக தல ரசிகர்கள் இதை வேற லெவெலில் கொண்டாடினர். ஒரு பக்கம் இவர்கள் கொண்டாட மற்றொரு பக்கம் இந்த போஸ்டரை சில ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதிலும் இந்த மோஷன் போஸ்டரில் வரும் புகைப்படத்தை நெட்டில் இருந்து வாங்கி பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நெட்டிசன்கள் அதை ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in