The Indian Times

கெத்தாக புல்லட் Bike ஐ ஓட்டி சென்ற மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன் பேட்டை படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மலையாள திரையுலகில் கலக்கி கொண்டிருந்த இவர் தமிழில் துணை கதாபாத்திரத்தில் தான் முதலில் நடித்தார். இவருடைய வசீகரத் தோற்றம் அனைவரையும் கவர்ந்ததால் இவருக்கு இணையதளத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த மாளவிகா மோகனன் தனது இரண்டாவது படத்திலே தளபதி விஜய்யுடன் நடிக்கும் வாயப்பினை பெற்றார்.

Advertisement

தளபதிக்கு ஜோடியாக நடித்த “மாஸ்டர்” படம், வெற்றிநடைப்போட்டது. இவருக்கும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ரசிகர்கள் அடுத்து மாளவிகா மோகனன் எந்த படத்தில் யாருடன் நடிப்பார் என ஆவலாக எதிர்ப்பார்த்தனர். கடந்த வருடம் தனுஷ் பிறந்த நாளன்று இவர் தெரிவித்த வாழ்த்துதான் இவருக்கு அடுத்த பட வாய்ப்புக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார். மாளவிகா மோகனன் நடிகர் தனுஷ் உடன் நடிக்க ஆசை என்று அவரிடமே கூறியதால், நடிகர் தனுஷ் மாளவிகா மோகனனின்

Advertisement

ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார். ஆம், தனுஷ் அடுத்து நடித்து கொண்டிருக்கும் தனது 43வது படத்தில் கதாநாயகியாக மாளவிகா நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்நிலையில் தற்போது புல்லட் வண்டியை ஓட்டி செல்லும் விடியோவை வெளியிட்டுள்ளார் மாளவிகா. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in