The Indian Times

STR பாடிய தப்பு பண்ணிட்டேன் video song | Megha Akash | Kalidas Jayaram

சிம்பு தமிழ் ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார். கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு ரசிகர்களை வியப்படைய செய்தார்.

Advertisement

சமூகவளைதளங்களில் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் எஸ்.டி.ஆர். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் , எஸ்.ஜே சூர்யா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் கூட இந்த படத்தின் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு பாடிய தப்பு

Advertisement

பண்ணிட்டான் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் காளிதாஸ் நடித்துள்ளார். பாவ கதைகளில் இவரின் நடிப்பிற்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் தற்போது தப்பு பண்ணிட்டான் என்ற ஆல்பத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். தற்போது இந்த பாடல் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in