The Indian Times

தளபதி விஜயின் LEO படத்தின் ஷூட்டிங் SPOT புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.

Advertisement

இவருக்கு அண்மையில் வாரிசு படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்க உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் வேளைகளில் பயங்கர பிசியாக உள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க உள்ளது, இப்படத்தில் நடிகர் அர்ஜுன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.கதாநாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளார்

இப்படம் காஷ்மீரில் மற்றும் சென்னையிலும் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் பாடல் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in