The Indian Times

LEO படத்தின் “நான் ரெடி” முதல் பாடல் ப்ரோமோ வெளியாகியது

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Embed Video Credits : SONY MUSIC SOUTH

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்,இசையமைப்பாளராக அனிருத் இப்படத்தில் இணைந்துள்ளார்.

ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தில் இடம்பெற்ற நான் ரெடி முதல் பாடலை படக்குழு வெளியிட உள்ளது,இந்நிலையில் தற்போது இப்பாடலின் முன்னோட்டத்தினை வெளியிட்டுள்ளது படக்குழு.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in