The Indian Times

ரெட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நடிகை நயன்தாரா…புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அந்தளவிற்கு நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர்.இவரை தமிழ் ரசிகர்கள் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர்.தற்போது பாலிவுட் படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவர் அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Advertisement

தற்போது லேடி சூப்பர் ஸ்டார் பெயருக்கு ஏற்றாற்போல தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.இவ்வாறு நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

Advertisement

தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் ,நயன்தாராவும் இரட்டை குழந்தைகளுக்கு அம்மா அப்பாவாகியதாக தெரிவித்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது எப்படி அதற்குள் குழந்தை பெற்றார்கள்,அண்மையில் வெளியாகிய புகைப்படத்தில் கூட நயன்தாரா கர்ப்பமாக இல்லையே தற்போது எப்படி என்று குழம்பி வருகின்றன.ஒருசிலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in