The Indian Times

படப்பிடிப்பில் பயங்கர சேட்டை செய்யும் நடிகை வரலட்சுமி சரத்குமார்…

பிரபல நடிகர் சரத்குமார் அவர்களின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி .முதல் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சரத்குமார் அவரை விவாகரத்து செய்தார். பின்னர் நடிகை ராதிகாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.இவரது மகள் வரலட்சுமி தற்போது சினிமா உலகை கலக்கி வரும் நடிகையாக வலம் வருகிறார்.போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் வரலட்சுமி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இருப்பினும் சினிமா ரசிகர்களிடம் இவர் சென்றடையவில்லை.பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தினையும் பெற்று அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.இவர் அறிமுக படத்திற்கே சிறந்த அறிமுக நடிகை என 2 விருதுகளை பெற்றுள்ளார்.கதாநாயகி வேடமாக இருந்தாலும் சரி,வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கதாநாயகர்களுக்கு சரிசமமாக அடித்து நொறுக்கி வருகிறார்.இவர் சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கும் யசோதா படத்தில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வரலட்சுமி.தந்தையை எதிர்பார்க்காமல் தனது கடின உழைப்பால் இத்தகைய இடத்தினை அடைந்துள்ளார் என்றால் மிகையாகாது.அண்மையில் வெளியாகிய யசோதா படத்தில் சமந்தாவுக்கு வில்லியாக நடித்து அசத்தியிருப்பார்

Advertisement

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி அடுத்தடுத்து பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார்.இதுவரை வரலட்சுமியை வில்லி கதாபாத்திரத்திலும்,ஒரு சீரியசான அதிகாரி கதாபாத்திரத்திலும் தான் பார்த்திருப்போம்,ஆனால் உண்மையில் அவர் அப்படி இல்லை,படப்பிடிப்பில் இவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை,தற்போது நடைபெற்று வரும் புதிய படத்தில் போலீசாக நடித்து வருகிறார்,இந்நிலையில் இவர் சக நடிகர்களுடன் ஆட்டம் போட்டு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார் மேலும் அதனை தனது சமூகவலைத்தள பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in