நடிகர் சூர்யா போல் உடற்பயிற்சி செய்து மாஸ் காட்டிய நடிகர் சூரி

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் அம்மா வைத்த பெயரை மாற்றிக்கொண்டு தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பெயர் ஆன சூர்யா என மாற்றிக்கொண்டார்.அது நாளடைவில் சூரி என மாறியது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகர் சூர்யா போல் உடற்பயிற்சி செய்து மாஸ் காட்டிய நடிகர் சூரி 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இதில் இடம் பெட்ரா பரோட்டா காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது,அன்றுமுதல் சாதா சூரி இப்படத்தில் இருந்து பரோட்டா சூரி என்று மக்களிடம் அறிமுகம் ஆகினார்.தனது கடின முயற்சியினால் தற்போது முன்னணி இடத்திற்கு வந்துள்ளார் நடிகர் சூரி.பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக சூரி நடித்து அசத்தி விட்டார்.தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

நடிகர் சூர்யா போல் உடற்பயிற்சி செய்து மாஸ் காட்டிய நடிகர் சூரி 2

விளம்பரம்

சூரி சீமராஜா படத்திலேயே கடின உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்திருந்தார்.இவர் தனது கட்டுமஸ்தான உடலை படத்தில் காண்பிக்கும் பொழுது திரையரங்கமே ரசிகர்கள் சத்தத்தில் அலறியது.அப்பொழுது ஆரம்பித்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருகிறார் சூரி.தற்போது இவர் கம்பியில் சூர்யா போல உடற்பயிற்சி செய்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூரியை வியந்து பார்த்துள்ளனர்.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment