The Indian Times

படத்துல பெருசா சொல்லிக்க ஒண்ணுமில்லை.. விருமன் PUBLIC REVIEW

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர்.இயக்குனர் ஆக வேண்டும் என கனவோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் இன்று மிக பெரிய நடிகராக மாறியுள்ளார்.வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தினை பிடித்துள்ளார் கார்த்தி.இவர் நடித்த பல படங்கள் இவருக்கு வெற்றியை மட்டுமே பெற்றுத்தந்துள்ளன.முதல் படத்திலேயே இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் படத்தில் கிராமத்து ஆளாக வந்த கார்த்தி அடுத்த படமான பையா படத்தில் மார்டன் ஆன சிட்டி பையனாக வந்து அசத்தி அனைவரையும் கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார்.முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியாகிய கொம்பன் படத்தினையும் இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.கொம்பன் படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.விருமன் படத்தில் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி அறிமுகம் ஆகியுள்ளார்.இவர்களுடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

Advertisement

இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இப்படத்தினை காலை 4 மணி முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் ஆர்வமாக கண்டுகளித்து வருகின்றனர்.கொம்பன் படத்திற்கு பிறகு வரும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்ளிடம் இருந்தது.இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் கூறுவதாவது,ஒரு தடவை பார்க்கலாம்,ரொம்ப மெதுவா இருக்கு படம்,என தெரிவித்துள்ளனர்.மேலும் சிலர் முத்தையா படம் என்றாலே ஒரே மாறித்தான் இருக்கும் பார்க்கலாம் ஒருதடவை படத்தில் சொல்லும் அளவுக்கு பெருசாக ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளனர்.சமீபத்தில் வெளியாகிய படத்தினை போலவே இப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

Embed video credits : YOUTH CENTRAL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in