The Indian Times

வெட்கபட்டுக்கிட்டே ரசிகர்களுக்கு கை காண்பித்த நடிகை அதிதி சங்கர்

கோலிவுட்டில் தற்போது மிகவும் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சென்னையில் ரசிகர்களுடன் படத்தினை காண அதிதி இன்று திரையரங்கிற்கு வருகை தந்தார்

Advertisement

அப்பொழுது அங்கு கூறியிருந்த ரசிகர்கள் அதிதி பெயரை சொல்லி கோஷம் போடவே அதை கண்டு அதிதி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.திரையரங்குக்குள் ரசிகர்கள் அதிதி என கத்தவே வெட்கபட்டுக்கொண்டே எழுந்து நின்று அவர்களுக்கு கியூட் ஆக கையசைத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.படம் வெளியாவதற்கு முன்னரே தம் சினிமாவில் அதிதிக்கு கிடைத்த வரவேற்பு இதுவரை எந்த நடிகைக்கும் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார்

Embed video credits : TN360

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in