The Indian Times

மகளை குழந்தை போல கைபிடித்து அழைத்து சென்ற தல அஜித்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையை அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது 61வது படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் சிறிய இடைவெளிக்கு பிறகு கலந்துகொண்டுள்ளார்

Advertisement

அஜித்குமாரின் புகைப்படம் வெளியானாலே அவரது ரசிகர்கள் அதனை ஷேர் செய்து இணையத்தில் கொண்டாடுவது வழக்கம்.பிற நடிகர்களுக்கெல்லாம் இந்த பாக்கியம் கிடைப்பது பெரும் ஆச்சரியம் தான்.இந்நிலையில் அஜித் குமார் தனது மகள் அனோஷ்காவை கைபிடித்து அழைத்து செல்லும் வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.இந்த வீடியோவில் தனது மகளை குழந்தை போல அழைத்து சென்றுள்ளார்.இந்த வீடியோவை பார்க்கும்பொழுது விஸ்வாசம் படத்தில் அஜித்தை பார்ப்பது போல உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in