The Indian Times

வேஷ்டி சட்டையில் MASS-ஆக வந்து தேசிய விருதினை பெற்ற சூர்யா

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா உடன் கைகோர்த்துள்ளார்.சூர்யாவின் 41வது படமான வணங்கான் படத்தினை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.

Advertisement

தற்போது சூர்யா சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த கதாநாயகன் என தேசிய விருதினை பெற்றுள்ளார்.68வது தேசிய விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் வேஷ்டி சட்டையில் கெத்தாக வந்து தனது விருதினை பெற்றுக்கொண்டார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் சூர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : MANA STARS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in